6 வயதுச் சிறுவனுக்கு எமனான றம்புட்டான்!

றம்புட்டான் பழத்தை உட்கொண்ட சிறுவன், அதன் விதை தொண்டையில் சிக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் கற்பிட்டி ஆலங்குடாப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறப்புத் தேவையுடைய ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் (வயது-6) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

தற்போது றம்புட்டான் சீசன் ஆரம்பித்துள்ளதால் அவற்றை வாங்கும் பெற்றோர் சிறுவர்களுக்கு அவதானமாக உட்கொள்ளக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.