மல்லாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி!!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவரது துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பழை பொலிஸ் நிலைய அதிகாரியே உயிரிழந்துள்ளார். அவர் கடமையிலிருந்தபுாதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவருகின்றது.உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.