பிக் பாஸ் மிட்நைட் மசாலா!

ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இடம்பெறும் சில போட்டிகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளே சில டாஸ்க்குகள்  பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி சோதனை நிறைந்த டாஸ்குகளை போட்டியாளர்கள் எப்படி சாதனையாக நினைத்து விளையாடுகிறார்கள் என்பதுதான் வியப்பாக உள்ளது. சரி நேற்று இந்த டாஸ்க்குகளை முடிந்த பின் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது… ஒரு குட்டி ரீ-வைண்டு!

பிக் பாஸ் போட்டியாளர்கள்

* மாற்றி மாற்றி தண்ணீரை இரைத்த களைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் உட்கார்ந்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அனந்த் வைத்தியநாதன், ‘சுகர் பேஷன்ட்டுடா நானு’ என்றபடி உட்கார்ந்து தன்னுடைய கால்களை நீவி விட்டுக்கொண்டிருந்தார். இதற்குப் பின் ‘அனந்த் கன்ஃபஷன் ரூமுக்கு வாங்க’ என்று பிக் பாஸின் குரல் ஒலித்தது. எதற்காக கூப்பிட்டார்கள் என இன்று இரவுதான் தெரியும்.

* நேற்று முழுவதும் எலியும் பூனையுமாக அடித்தும் கடித்தும் சண்டை போட்டுக்கொண்டிருந்த யாஷிகா – ஐஷ்வர்யா கூட்டணி, ஓடிப்பிடித்தும் கட்டிப்பிடித்தும் விளையாடிக்கொண்டிருந்தனர். ‘சின்ன பசங்க சகவாசம் கொல நாசம்’ என்பதுபோல் ஷாரிக் தனது துணிமணிகளை பெருமூச்சு விட்டுக்கொண்டே அடுக்கிக்கொண்டிருந்தார். யாஷிகா அந்தப் பக்கம் சென்றவுடன், ஷாரிக்கிடம் ‘நீ காலையில யாஷிகாகிட்ட என்ன சொல்லிட்டு இருந்த என்று சட்டையைப் பிடிக்காத குறையாக கேட்டுக்கொண்டிருந்தார், ஐஷ்வர்யா. கன்டென்ட் என்னவென்று நாளைதான் தெரியும். ஃபன் இருக்கு!

ஷாரிக் - ஐஸ்வர்யா

* ஐஷ்வர்யா தனக்கு நடந்த விபத்து ஒன்றை ரம்யாவிடமும் ஷாரிக்கிடமும் பகிர்ந்துகொண்டிருந்தார். ‘எனக்கு ஒரு முறை டோட்டல் பாடில அடிபடுற மாதிரி ஆக்ஸிடன்ட் ஆச்சு. எனக்கு வேற இடத்துல ஒரு ஷோ வேற இருந்தது. ரெண்டு மூணு கோட்டிங் மேக்-அப் போட்டு போய் அந்த ஃபங்ஷன்ல கலந்துக்கிட்டேன்’ என்று தனது பெருமையைச் சொல்லிக்கொண்டிருந்தார். இவங்க யூஸ் பண்ற முதல் உதவி பெட்டில ஃபேஷியல் கிட்தான் இருக்குமோ. வழக்கம்போல் ஐஷ்வர்யா வழியில் கர்சீப்பைப் போட்ட ஷாரிக், ஐஷ்வர்யாவின் முகத்தில் தண்ணீரை தெளித்துவிட்டு, ‘இது வாட்டர் ப்ரூஃப் மேக்-அப் இல்லையா’ என்று குறும்புக் கடி ஜோக்கைப் போட்டுவிட்டு பறந்துவிட்டார்.

* இந்த ஜோடி புறாக்கள் வெளியே வந்ததும் நீச்சல் குளத்தின் அருகே உட்கார்ந்திருந்த டேனியல் அண்ட் கோ கவுன்டர் கொடுத்து கலாய்த்துக்கொண்டிருந்தனர். அந்த கும்பலின் தலைவரான மஹத் பெட்ரூமில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் யாரோ ஆங்கிலம் அதிகம் பேசியிருப்பார் போல, ஏற்கெனவே சொன்னதுபோல் சைரன் அடித்தது. ஹவுஸ் மேட்ஸில் ஐந்து பேர் நீச்சல் குளத்தில் குதித்தனர். ஆனால் இங்கிலீஷ் பேசிய கல்ப்ரிட் யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் நம்ம கடலமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட் பா!

போட்டியாளர்கள்

* என்றும் இல்லாத திருநாளாக நேற்று இரவு ஐஷ்வர்யாதான் சமைத்தார் போல. ‘ஐஸு சமையல் பண்ணா விஷ் பண்ணுங்க’ என்று டேனியல் ‘வி.வி.குட்’ சர்டிஃபிகேட் வழங்கிக்கொண்டிருந்தார். ‘தட் நானும் சமையல்காரிதான்டா’ என்றபடி கெத்தாக உட்கார்ந்து போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. நித்யா சாப்பாடு பத்தாமல், பிக் பாஸிடம் வழக்கம்போல் பிரியாணி கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாப்பிடும் வேகத்தைக் குறைத்த பாலாஜி, ‘இந்தா இதைச் சாப்பிடு’ என்று அவர் சாப்பாட்டைக் கொடுத்தார். ‘இந்த பால் வடியிற முகத்தையா எலிமினேட் செய்ய நாமினேட் செய்தீர்கள் நித்யா?’

* இதற்கு நடுவில் அனந்த் வைத்தியநாதனிடம் தனது குடும்பத்தைப் பற்றி சொல்லி ஃபீல் செய்துகொண்டிருந்தார், மஹத். அவரது அம்மா கோல்டு மெடலிஸ்ட் என்பதும் இதில் கூடுதல் தகவல். குறுக்கே யாஷிகாவும் ஐஷ்வர்யாவும் மஹத்தை வம்பிழுக்க வந்தார்கள். மஹத், ட்ரெஸ்ஸை மடித்து வைத்துக்கொண்டிருந்த ஸ்டைலைப் பார்த்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் போர் அடித்தது  என கிளம்பிவிட்டார்கள். மீண்டும் அனந்திடம் தனது குடும்ப நிலவரங்களைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். அதன் பின்னர் ஜனனி, ஷாரிக், ஐஷ்வர்யா, யாஷிகா என நான்கு பேரும் மஹத்துடன் கூட்டு சேர்ந்தனர். டாபிக் எங்கெங்கோ செல்ல, ‘பசங்க சிரிக்க வைப்பாங்க, பொண்ணுங்க சிரிப்பாக்கிருவாங்க’ என்று பன்ச் கூறினார். ‘இதெல்லாம் நோட் பண்ணாதீங்க டா டேய்’