தமிழகத்தில் ஆறு பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்து ஏமாற்றிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 5 திருமணங்கள் முடிந்த போதும், மனைவிகளுடன் வாழாமல் பெற்றோருடனே தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேலைத் தொடர்பாக சங்ககர கிரி என்ற ஊருக்கு சென்று வந்த போது தங்கவேல் என்பவருடன் பூபதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தங்கவேலுக்கு கிருஷ்ணவேணி என்ற மகள் இருப்பதை அறிந்த பூபதி, தங்கவேலுவிடம் நன்றாக பழகி அவரிடம் பெண் கேட்டுள்ளார்.
ஆனால் பூபதி வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கவேல் முதலில் மறுத்துள்ளார். இருப்பினும், பூபதி அவரிடம் தொடர்ந்து பேசி தங்கவேலுவை சம்மதிக்க வைத்துள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணவேணிக்கும், பூபத்திக்கும் கடந்த மே மாதம் சேலம் ஊத்துமலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த சில நாட்களிலே மனைவி கிருஷ்ணவேணி வைத்திருந்த 10 பவுண் சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை, விவசாயம் செய்யவும், குடும்ப செலவுக்காகவும் எனக் கூறி பூபதி வாங்கியுள்ளார்.
கணவனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பூபதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பூபதி குறித்து கிருஷ்ணவேணி விசாரித்துள்ளார்.
அப்போது ஏற்கனவே அவருக்கு 5 பெண்களுடன் திருமணமானதும், அவர்களுடன் வாழாமல் துரத்தி விட்டதும் தெரியவந்துள்ளது
இது குறித்து கிருஷ்ணவேனி பூபதியிடம் கேட்ட போது, வீட்டில் அடைத்து வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அதன் பின் ஒரு வழியாக அங்கிருந்து தப்பிய கிருஷ்ணவேனி சங்ககிரியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் பூபதியை கைது செய்த நிலையில், உடந்தையாக இருந்த அவரின் தாய் மற்றும் தந்தையை தேடி வருகின்றனர்.