உடல் எடையை குறைக்க விரும்புபவரா? தயவு செய்து இந்த தவறுகளை செய்யாதீங்க

உடல் எடையை குறைக்க மிக எளிதான வழியாக சாப்பிடாமல் இருப்பதையே பலரும் செய்வார்கள். எனினும், பசி அதிகமானதும் சாதாரணமாக சாப்பிடும் அளவை விட 2 மடங்கு அதிகமாக சாப்பிட்டு விடுவீர்கள்.

  • ஒரு நாளுக்கு 3 முறை என சாப்பிடும் முறையை மாற்றி 5 முறை என சாப்பிடுங்கள். இதனால் கலோரிகள் கூடாது. அதே சமயம் நாள் முழுமைக்கும் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.
  • தினமும் சைவ உணவு சாப்பிடுபவர்களைவிட, அசைவ உணவு சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளதென ஆய்வு ஒன்று கூறுகிறது.
  • காஃபியில் ஸ்வீட்னர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
  • பிரஸ் ஜூஸ் மட்டுமே குடியுங்கள். பாக்கெட் ஜூஸ்களில் நிச்சயம் ஸ்வீட்னர் கலந்திருக்கும்.
  • சாக்லேட் அல்லது சாக்கோ சிப்களை சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.
  • சாப்பிடும்போது சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். லேப்டாப், மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
  • தினமும் 7 மணிநேரத்துக்கு குறையாமல் தூங்குங்கள். தூக்கமின்மை வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உருவாக்கும்.