உலகிலேயே மிக கொடூரமான கடல் பாம்பு! பார்த்தால் திகைத்து போவீர்கள்!

கடித்த உடனே நரம்பு மண்டலத்தைப் பாதித்து மரணத்தை விரைவு படுத்தும் விஷ ஜந்துக்கள் உலகத்தில் பரவலாக காணப்படுவது தெரிந்ததே.

உலகத்தில் கொடிய விஷத்தினை அதிகமாகக் கொண்ட பாம்பினங்கள் அனைத்து நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.

உலகிலேயே மிகக் கொடூரமான நச்சினைக் கொண்ட பாம்பாக கருப்பு மாம்பா விளங்குகின்றது. இது ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும்.

இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம்.

மணிக்கு 20 கி.மீ (12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்றும் அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு வேகமாக ஏற்பட்டுவிடும்.

அதற்கடுத்த படியில் நாக பாம்புகள், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியன அதிக நச்சு வாய்ந்த பாம்பினங்களாக விளங்குகின்றன.

தரையில் மட்டும்தான் விஷ ஜந்துக்கள் காணப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். ஆழமான கடல்களில் கூட கொடிய ஜந்துக்கள் காணப்படுகின்றன. அதிலும் கொடிய விஷத்தினையுடைய பாம்பு ஒன்று கடற்பகுதிகளில் காணப்படுகிறது..

அது, Belcher Snake எனும் கடல் பாம்பு தான் உலகிலேயே அதிக விஷமுள்ள நீர்வாழ் பாம்பினமாகும். கடல்வழியில் நிகழும் அதிகமான மரணங்களில் இந்தப் பாம்பால் கடியுண்டு இறப்பதும் முக்கிய இடத்தினைப் பிடித்திருக்கிறது.

உடலில் கறுப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட இந்தப் பாம்புதான் கடலில் காணப்படும் பாம்பினங்களில் அதிக விஷத்தினையுடையது. இந்தியப் பெருங்கடலில்தான் இந்தப் பாம்புகள் அதிகமானளவில் காணப்படுகின்றன.

இவை மீனவர்களின் வலைகளில் சிக்குவதனால் தான் மனிதர்களைத் தாக்க முற்படுகின்றன.

இந்த பாம்பு தாக்கியதும் 30 நிமிடத்திற்குள் விஷத்திற்கான மாற்று மருந்து கொடுக்கவில்லையெனில் இறப்பு நிகழ்வது உறுதியெனெ கண்டறியப்பட்டுள்ளது.

உண்மையில் கடலில் காணப்படும் பாம்பினங்கள் எல்லாமே அதிக விஷத்தினைக் கொண்டவையல்ல.

அதோடு கடல் பாம்பினங்கள் தரைப் பாம்புகளைவிட மிகவும் பயந்தாங்கொள்ளிகள்.

மனித நடமாட்டத்தைக் கண்டதும் தூர விலகிக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை. ஆனால் தவறுதலாக தான் அச்சுறுத்தப்பட்டால் மட்டும்தான் இந்த வகைப் பாம்புகள் மனிதர்களைத் தீண்டிக் கொள்கின்றன.