தமிழர்களை கொலை செய்த புரூஷ்: மீண்டும் தேடுதல் பணிகள் தீவிரம்

கனடா ரொரன்றோ பகுதியில் இலங்கை தமிழர்கள் இருவர் உள்ளிட்ட பலரை கொலை செய்ததாக குறிப்பிடப்படும் புரூஷ் மெக் ஆத்தர் என்பவரின் ஆதனப்பகுதிகளில் மீண்டும் தோண்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதே வேளை இதற்கான காரணங்கள் எதனையும் கனேடிய பொலிஸார் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த நடவடிக்கையின்போது தடயப்பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அவை குறித்து இறுதி முடிவுகளை அறிவிக்கமுடியாதுள்ளதாக கனேடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையர்களான ஸ்கந்தராஜ் நவரட்ணம் மற்றும் கிருஸ்ணகுமார் கனகரட்ணம் ஆகியோர் உட்பட்ட பலரை 2010ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் தொடர் கொலை செய்ததாக மெக் ஆத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து கொலை செய்யப்பட்டவர்களின் தகவல்களும் வெளியிடப்பட்ட நிலையிலேயே நேற்று தோண்டல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை பல்வேறு இடங்களை அடையாளம் காட்டி வருவதாகவும் கனேடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.