பொதுவாக பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. எனினும், ஓமோன்களினால் ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும்.
இந்த மாற்றங்களில் முக்கியம் வாய்ந்ததாக கருதக்கூடியது செரிமானம், குடல் இயக்கங்களிலும் மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்.
கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஓமோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணிகளின் உடலில் கர்ப்பம் சார்ந்த ஓமோன்களின் அதிகரிப்பதால், வேறு சில சுரப்பிகளும் அதிகரிக்கும். இந்த சுரப்பிகள் அவர்களின் மார்பகத்தின் அளவை பெரியதாக்குகிறது. இதனால் கர்ப்பக் காலத்தில் பெண்கள் தங்களது மார்பகங்களை சற்று பாரமாக உணர்வார்கள்.
கருவுற்று இருக்கும் பெண்களுக்கு மார்பக பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஓமோன்கள் மாற்றம் அடைந்து இழையங்கள் உப்பியது போல இருப்பதால், அவர்களின் மார்பகம் பாரமாக இருப்பதுடன் கொஞ்சம் வலி மிகுந்ததாகவும் உணர்கிறார்கள்.
மேலும் கர்ப்பிணி பெண்களின் மார்பக பகுதியில் நீல நிறத்தில் நரம்புகள் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் மார்பகத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்த ஓட்டம் தான். அதற்காக பயப்பட தேவையில்லை என மகப்பேறு நிபுணர்கள் கூறுகின்றனர்.