கர்ப்பிணிகளுக்கு சில குறிப்புகள்!

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியக் குறிப்புகள்.

வயிற்றில் கரு வளரும் போது கருக்காலத்தின் பின் பகுதியில் வயிறு முன் தள்ளியும் அந்தக்கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் தோள் பட்டைகள் பின் தள்ளியும் இருக்கும். இந்த நிலை கர்ப்பிணிகளுக்கு முதுகுவலியை உண்டாக்கும். இது ‘ஹீல்ஸ்” செருப்பு அணிவதால் வலி கூடும்.

ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே மூச்சு வாங்கும். என்றாலும் பலருக்கு கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் இந்த சிரமம் இருக்கும். இதனால் குழந்தைக்கோ,தாய்க்கோ கெடுதல் நேராது.

கர்ப்பிணிகள் இறுக்கமான காற்று புகாத ஆடைகளைத் தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளைக்கூட தளர்வாக அணிவது சிறந்தது.

கருக்காலத்தில் சுரக்கும் புரொஜெஸ்டிரானால் குடலிலுள்ள மென்மையான தசைகள் தளர்கின்றன. இதனால் மரசிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க திரவ உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது அவசியம்.

உணவைப் பொறுத்தவரை அரண்டு பேருக்கு உட்கொள்ள வேண்டும் என்று அதிகம் உண்ணக்கூடாது. இது உடலில் தேவையற்ற சதையைக் கூட்டும் இரு உயிர்களுக்குத் தேவையான சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும். உடலில் புதிய திசுக்கள் வளர்வதற்கு புரதச் சத்தும் உடலில் நிகழும் இரசாயன மாற்றங்களு உயிர்ச்சத்து(வைட்டமின்)மற்றும் தாதுப்பொருட்களும் தேவைப்படுகின்றன. அரிசி போன்ற மாவுப் பொருட்கள் மனித இயக்கத்துக்குத் தேவையான சக்தியைத் தருகின்றன. கர்ப்பகாலத்தில் புரதச் சத்து, உயிர்ச்சத்து, தாதுபொருட்கள் அடங்கிய பால், முட்டை, கீரை, காய்கறி, பழங்கள், இறைச்சி ஆகியவற்றை மிகுதியாக உண்ண வேண்டும். மாவுச்சத்து அடங்கிய உணவுப் பொருட்களை குறைத்து உண்ண வேண்டும்.

எந்த மாத்திரையையும் மருத்துவரின் ஆலோசனை இன்றி கர்ப்பிணி உட்கொள்ளக்கூடாது. தாலிடோமைட்(Thalidomide) என்ற மருந்து மசக்கையைப் போக்க முன்பு அளிக்கப்பட்டு வந்தது. இது கருவிலுள்ள குழந்தையின் கை, கால் வளர்ச்சியைப் பாதித்தது தெரிய வந்தவுடன் கர்ப்பிணிகளுக்குவெசியமான கடுமையான பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட மருந்து மாத்திரைகள் மட்டுமே மருத்துவர்கள் அளிக்கின்றனர்.

தாயின் மது, புகைப் பழக்கங்கள்கூட குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

பணியிலிருக்கும் கர்ப்பிணிகள் கடுமையான உடல் உழைப்பு இல்லாத பட்சத்தில் கர்ப்ப காலம் முழுவதும் கூட பணிபுரியலாம்.

உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் எப்போதும் போல் கர்ப்ப காலத்திலும் தங்கள் உடற்பயிற்சியைத் தொடரலாம். தங்களால் இயன்றவரை டென்னிஸ்,கோல்ப் போன்ற விளையாட்டுக்களைக்கூட விளையாடலாம். நீந்தலாம் அதாவது, கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடற்பயிற்சிப் பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை.

மயக்கம், படபடப்பு ஆகியவை கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது சகஜம். அவர்களின் உடலில் ஏற்படும் இரத்த ஓட்ட வேறுபாடுதான் இதற்குக் காரணம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பிணிகளுக்கு வழக்கமாக ஏற்படுவதுதான்.

கர்ப்ப காலத்துக்குத் தேவையான அனைத்துத் தடுப்பு ஊசிகளையும் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.