உங்கள் துணை உங்களிடமே இருக்க வேண்டுமா? அப்போ இதைப் படிங்க

வாழ்க்கை எப்போதுமே வார்த்தைகளில் இருக்கிறது என்பார்கள். நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் பெரும்பாலும் உடனுக்குடன் எதிர் வினைகளை உண்டாகிவிடும். அது நல்லபடியாகவோ அல்லது பயங்கர தீமைகளையோ காட்டி விடும். குறிப்பாக மனைவி, காதலி இவர்களிடம் கொட்டும் வார்த்தைகளில் மிக கவனமாக இருக்கவேண்டும்.

இல்லையேல் வாழ்க்கை சீரழியும். குறிப்பாக மனைவியை பாராட்டவோ சீராட்டவோ கூட வேண்டாம்.  மனம் நோகாமல் பேசாமல் இருந்தாலே போதும் என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.

இப்போது பல குடும்பப் பெண்கள் செய்யும் ஒரு காரியம் கணவனிடம் ஏதாவது குற்றம் குறை கண்டால் உடனே பெண்கள் வேறு ஒரு நட்பை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

பெரும்பாலான ஆண்கள் புது மனைவியிடம் கேட்கும் ஒரு கேள்வி “இதுக்கு முன்னாடி வேறு யாரையாவது லவ் பன்னி இருக்கியா.. சொல்லு நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்..”

அடுத்த கேள்வி “உனக்கு முன்னாடி ஏதாவது காதல் அனுபவம் இருக்கா? இல்ல அதுக்கும் மேல ஏதாவது?”

இந்த காலத்தில் அனைத்து ஆண்களும் தங்கள் மனைவி உத்தம பத்தினியாக இருக்க வேண்டும் என்று தான் வேண்டுகிறார்கள். ஆனால், எத்தனை ஆண்கள் உத்தமனாக, எந்த பெண்ணையும் ஏறெடுத்து பாராமல், ஃபேஸ்புக்கில் கூட மொக்கை போடாமல் இருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்..!

எனவே வக்கிரமான கேள்விகளை உங்கள் துணையிடம் கேட்காதீர்கள்.