எல்லா விலங்குகளும் அவற்றை வளர்த்து வரும் உரிமையாளர்களை மிகவும் பாசத்தோடு கவனித்துக்கொள்ளும். உரிமையாளர்கள் மரித்தாலோ அவர் சற்று சோகமாக இருந்தாலோ அவரின் அருகிலேயே நாய், பூனை போன்ற விலங்குகள் அவர்கள் கூடவே இருப்பது போன்ற பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி ஒரு சம்பவம் தான் தாய்லாந்தில் யானை ஒன்றும் செய்துள்ளது. தாய்லாந்தில் தனது எஜமானரை தாக்குவது போல சிறுவர்கள் நடித்ததைக் கண்டு யானை துடித்துப்போன காணொளி காட்சி சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.
தாய்லாந்தில் சியாங் மாய் (Chiang Mai) என்ற சிறுவன், தோங்ஸ்ரீ (Thongsri) என்ற பெயர் சூட்டப்பட்ட 7 வயதான யானை ஒன்றை வளர்த்து வருகிறான். சியாங்கை அவரின் நண்பர் ஒருவர் தாக்கி தள்ளி விடுவது போல் நடித்தார்.
அதனைக் கண்ட தோங்ஸ்ரீ தனது எஜமானருக்கு ஏதோ பிரச்சனை எனக் கருதி வேகமாக ஓடி வந்து சியாங்கைப் பாதுகாத்தது.
இதுக்குறித்த காணொளியை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.