ஜோதிடர் பேச்சை கேட்டு சிக்கலில் சிக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு சொந்தமான மும்பையில் உள்ள அவரது வணிகவளாக கட்டடத்தின் விதிகளை மீறி கட்டுமானங்கள் இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

ஹாலிவுட்டிலும் கால் பதித்து தற்போது பல கோடி சம்பளம் பெற்றுவரும் பிரியங்கா சோப்ராவுக்கு மும்பை அந்தேரி பகுதியில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. அங்கு பல கடைகளை வாடைக்கு விட்டுள்ள அவர் தனது அலுவலகத்தையும் அங்கேயே வைத்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவை அணுகிய சில ஜோதிடர்கள அந்த வளாகத்தில் வாஸ்துபடி சில மாற்றங்களை செய்தால் மேலும் சிறப்பாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய பிரியங்கா வணிக வளாகத்தில் விதிகளை மீறி சில கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளார்.

இதனைகண்ட பொதுமக்கள் சிலர் மாநகராட்சியில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வணிக வளாகத்தை பார்வையிட்ட மாநகராட்சி அதிகாரிகள் விதிமீறலை உறுதி செய்து அதற்கு அபராதம் வித்தனர். மேலும் கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டனர்.

ஆனால் இதுவரை பிரியங்கா கண்டுகொள்ளவில்லை என்றும் அபராதத்தையும் செலுத்தவில்லை என அதிகாரிகள் தற்போது விளக்கம் சேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அத்துமீறி கட்டிய கட்டுமானங்களை இடித்து அகற்றுவோம் எனவும்எச்சரித்துள்ளனர்.