உடல் எடையைக் குறைக்க கற்றாழை போதும்! இரு வாரத்தில் அதிரடி மாற்றம் உண்டு?

உலகில் மக்கள் அவஸ்தைப்படும் பிரச்சினைகளில் முதன்மையானது உடல் பருமன். உடல் பருமனைக் குறைக்க பலரும் பல வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். சிலர் உடல் எடையைக் குறைக்க சிகிச்சை எல்லாம் மேற்கொள்கிறார்கள்.

ஆனால் அப்படி கஷ்டப்படுவதற்கு பதிலாக, இயற்கை தந்த வரப்பிரசாதமான கற்றாழையைக் கொண்டே எளிமையாக உடல் எடையைக் குறைக்கலாம்.

வெறும் கற்றாழை ஜூஸ்

கற்றாழை இலையின் பச்சை நிறத் தோலை நீக்கிவிட்டு, அதன் ஜெல்லை மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 கப் மற்றும் உணவு உண்ணும் 15 நிமிடத்திற்கு முன் என தொடர்ந்து 1-2 வாரங்கள் குடித்து வர, உங்கள் எடையில் நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

நீருடன் கற்றாழை ஜூஸ்

1-2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை நீரில் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடித்து வர எடை குறையும்.