1,10,19,28 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 3, 5, 6 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும்.எண் 1 சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.
திருமண திகதி 1, 10, 19, 28 திகதிகளும், 6, 15, 24 திகதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் திகதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும்.
2,11,20,29 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7- திகதி பிறந்த பெண்ணே மிகவும் சிறந்தவள். ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும்.
1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 -ம்திகதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.
3,12,21,30 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து (பிறந்த எண் அல்லது விதி எண்) கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
4,13,22,31 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 8 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.
இருப்பினும் 4-ம் திகதிகளில் பிறந்த ஆண்கள், 6-ம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.
இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் திகதிகளில் (திகதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.
5,14,23 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய திகதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் திகதிகளும் திருமணத்திற்கு உகந்தவை.
மேலும் 6, 15, 24 திகதிகளும், கூட்டு எண் 6 வரும் திகதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
6,15,24 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய திகதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் திகதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.
7,16,25 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும்.
8-ம்திகதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது! 9ம் எண் நடுத்தரமானதுதான்.
8,17,26 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 4 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8-ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9-ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.
9,18,27 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும்.
சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.