ஆபாசத்தின் உச்சத்தால் முற்றிய போராட்டம்! தடைசெய்யப்படும் தருவாயில் பிக்பாஸ் நிகழ்ச்சி!

பிரபல தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி, சேனலின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுளனர்.

அதாவது, கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17 -ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி கலாசாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் நிகழ்ச்சியாக உள்ளதாகவும், இதனால் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்ல வழிவகுப்பதாகவும் கூறி, சென்னையில் உள்ள குறித்த டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இவர்கள் குறித்த டிவி சேனலை தடை செய்ய வலியுறுத்தியும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இப் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்ததாகவும், குறித்த டிவி சேனல் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.