மும்தாஜுக்கு நேற்றிரவு ஒரு ரகசிய சவால் தரப்பட்டது. அதை அவர் நீண்ட யோசனைக்குப்பின் ஒப்புக்கொண்டார். ஒருபக்கம், இந்த ரகசிய சவாலுக்கு அவர் ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது என்று தோன்றினாலும், இரண்டு நாட்களாக இழுத்துக்கொண்டு இருக்கும் இந்த டாஸ்க்கை எப்படியாவது முடித்துத் தொலைங்க மோடுக்கு போட்டியாளர்களும், பார்வையாளர்களும் வந்துவிட்டனர்.
இந்த அணியில் ஒருவர் ஆங்கிலம் பேச, அதை எதிரணியினர் கண்டுபிடிக்க என்னும் இந்த விளையாட்டு மாறி மாறி நடந்துகொண்டே இருந்ததால், ‘முடிவுரை இல்லா சோதனையாக’ டாஸ்க் இழுத்துகொண்டே இருந்தது.
அந்த ரகசிய டாஸ்க்கை மும்தாஜ் வெற்றிகரமாக முடித்தால், ஒட்டு மொத்த அணிக்கும், லக்சரி பாயின்ட் வழங்கப்படும். ஆனால், மற்ற போட்டியாளர்கள் நம்மை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்கிற கேள்வியும் உண்டு. சென்ற சீசனில் ‘ ட்ரிக்கர்’ சக்திக்கு இதே போல், ஒரு சீக்ரெட் டாஸ்க் தரப்பட்டது.
அந்த டாஸ்க்கில் சக்தி வெற்றிபெற்றாலும், ஒட்டு மொத்த அணிக்கும் துரோகம் இழைத்ததற்கு கண் கலங்கினார் சக்தி. அதே போன்றதொரு நிலை, மும்தாஜுக்கு வருமா என்பது இன்று தெரியும்
அந்த வகையில் மட்டுமே மனம் இதை ஏற்றுக்கொள்கிறது. போட்டியாகவே இருந்தாலும், இதை மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குக் காரணமும் இருக்கிறது.
‘வெற்றி மட்டுமே முக்கியம். அதன் வழிகளை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்’ என்கிற செய்தியை முதலாளித்துவ சமூகம் நம் ஆழ்மனதில் பல்வேறு விதமாக ஆழமாக படிய வைத்துக்கொண்டிருக்கிறது.
தன்னுடைய அல்லது தன்னுடைய குழுவின் வெற்றிக்காக எவரையும் எப்படியும் மிதித்துக்கொண்டு முன்னேறலாம் என்கிற எண்ணம் நமக்குள் இயல்பானதாக மாறி இருக்கிறது.
ஆனால் மனச்சாட்சியின் குரலை நசுக்கிக்கொண்டு முன்னகரும் எந்தவொரு செயலும் முறையற்றதே. அவ்வாறு கிடைக்கும் வெற்றியும் ஆதாயமும் அர்த்தம் இல்லாதது. ஆதாரமாக நம்முள் இயங்கிக்கொண்டிருக்கும் அறவுணர்வின் குரலை காது கொடுத்துக் கேட்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
மும்தாஜ் செய்த ரகசிய சவாலின் மூலம் அனைவருக்கும் வெற்றி கிடைக்கப்போகிறது. லக்ஸரி பொருட்களுக்கான மதிப்பெண்களும் சிறப்புச் சலுகையும் கிடைக்கும் என்பது சரிதான்.
ஆனால் இதை அறிய வந்தவுடன் தங்களின் உழைப்பைக் கொன்று கிடைத்த வெற்றி சரிதானா என்று அவர்களில் நுண்ணுணர்வுள்ள சிலருக்குத் தோன்றலாம். இதற்காக சண்டைகளும் நடக்கலாம். அல்லது ‘எப்படியோ..வெற்றிதான் கிடைத்துவிட்டதே’ என்று மகிழ்ச்சியும் அடையலாம்.
இப்படி ஒருவரை ‘டபுள் ஏஜெண்ட்’ ஆக்குவதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே ஒருவரையொருவர் எப்போதும் சந்தேகப்படும்படியான சூழலை பிக்பாஸ் உருவாக்குகிறார்.
இனி, ஒருவரின் அசைவில் விநோதமாக ஏதாவது தெரிந்தாலும்கூட அது ‘ரகசிய சவாலோ’ என்று மற்றவருக்குத் தோன்றும். ‘பாம்பா.. விழுதா’ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டேயிருக்கும்.
இது மட்டுமல்லாமல் பிறகு நடக்கப் போகும் டாஸ்க்களில் ‘இதை எந்த ரகசிய ஆசாமியாவது வீணாக்குவாரோ’ என்று ஒருவேளை உருவாகும் மனத்தடை போட்டியாளர்களுக்கு சோர்வை உருவாக்கக்கூடும்.
மும்தாஜின் ரகசிய சவால் தொடர்பான விஷயம் அறியப்பட்டதும் மற்ற போட்டியாளர்கள் இதற்கு எப்படி எதிர்வினை செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்ந்து தொடரை வீடியோவில் பாருங்கள்
PART 1
PART 2