கேரள மாநிலத்தில் பொலிசார் நடத்திய விசாரணையால் மனமுடைந்து தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
நகை செய்யும் தொழிலாளி சுனில்குமார். இவர், சி.பி.எம் நிர்வாகி சஜிகுமாரிடம் நகைச்செய்யும் தொழிலகத்தில் பணிபுரிந்துவந்திருக்கிறார்.
இந்த நிலையில், நகையில் எடை குறைவாக இருப்பதாக சஜிகுமார் சங்ஙணாசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சுனில் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து சுமார் 12 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையின் போது சுனில்குமாரை பொலிசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், எடைகுறைந்த நகைக்கு ஈடாக 8 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என காவலர்கள் மிரட்டி பேப்பரில் எழுதிவாங்கிவிட்டு, வீட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தம்பதியனர் மனமுடைந்துள்ளனர். வீட்டுக்கு வந்த சுனில்குமார் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்