முதன் முறையாக தேம்பி தேம்பி அழும் டேனியல் பாலாஜி- பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட சோகம்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். சிரிப்பு, கொண்டாட்டம், விளையாட்டு, சண்டை, அழுகை என எல்லாமும் நிகழ்ச்சியில் இருக்கும். அதை முதல் சீசனிலும் நாம் பார்த்திருக்கிறோம்.

இதுவரை பிக்பாஸ் 2 சீசனில் மகிழ்ச்சியாக இருந்த போட்டியாளர்களை அழ வைத்துவிட்டார் பிக்பாஸ். மனதுக்கு பிடித்தவர்கள் பற்றி கூற வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருப்பார் என தெரிகிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தவர்கள் யார் என்று தெரிவிக்கின்றனர்.

அதில் டேனியல் பாலாஜி தேம்பி தேம்பி அழ, ரித்விகா, தாடி பாலாஜி, நித்யா என மூவரும் சில விஷயங்களால் அழுகின்றனர். இந்த புதிய புரொமோ பார்வையாளர்களுக்கு ஒரு சோகமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம்.