அஜித் விவேகம் படத்திற்கு பின் விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்காக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிவிட்டது, அவ்வப்போது படம் குறித்தும் தகவல்கள் வருகின்றன.
அஜித்-நயன்தாரா வரும் காட்சிகள் எல்லாம் சூப்பராக இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கின்றனர். இப்போது ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பே படத்தின் ஃபஸ்ட் லுக் தான்.
அஜித் இதில் சால்ட் அன் பெப்பர் லுக்கில் இருப்பாரா. இல்லை வேறொரு லுக்கா என பெரிய கேள்விகள் ரசிகர்களிடம் உள்ளது.
இப்போது என்ன விஷயம் என்றால் ஃபஸ்ட் லுக் இம்மாதம் வெளியாக இருப்பதாக அதிரடி தகவல்கள் வருகின்றன. எப்போ வந்தாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயார் என்றே கூறலாம்.