ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்று இருப்பவர்.
இந்நிலையில் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படமாக வந்த டிக் டிக் டிக் படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் தமிழகத்தின் ஷேர் மட்டுமே ரூ 15 கோடி வந்ததாக கூறப்படுகின்றது, இதற்கு முன் ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் தான் அதிக ஷேர் கொடுத்த படமாக இருந்தது.
இதன் மூலம், ஜெயம் ரவி தன் திரைப்பயணத்தில் மெல்ல அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது.