பசும்பால் எருமைப்பாலை விடவும் அதிக நன்மை அடங்கியது தான் ஒட்டகப்பால். ஆய்வுகளும் கூட பசும்பாலை விட ஆரோக்கியமானது ஒட்டகப்பால் என்றே தெரிவித்துள்ளன.தாய்ப்பாலுக்கு நிகரான தன்மை ஒட்டகப்பாலில் உள்ளதாகவும் குடிக்கவும் செரிமானம் அடையவும் எளிமையானது எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் பசும்பாலை விடவும் ஒட்டகப்பாலில் 1௦ மடங்கு அதிகமான இரும்பு சத்து இருப்பதாகவும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.ஒட்டகப்பாலில் பசும்பாலை விடவும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது.அலர்ஜி ஏற்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகின்றது. ஆண்மையின்மைக்கு சமீப காலமாக ஒட்டகப்பால் சிறந்த மருந்து என்பதை நிரூபித்து வருகின்றனர்.
ஒட்டகப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி,நோய் எதிர்ப்பு புரதம் அதிகளவில் இருப்பதினால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுக்கின்றது.அல்பாஹைட்ரோக்சல் என்ற ஒரு கூறு ஒட்டகப்பாலில் உள்ளது.இது மென்மையான கோடு மற்றும் சுருக்கங்களை வரவிடாமல் தவிர்ப்பதுடன் வயதான தோற்றத்தையும் தடுக்கின்றது.