தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்தியா முழுவதும் பிரபலமான டிவி ரியாலிட்டி ஷோ. இது தமிழ், ஹிந்தி, தெலுங்க்கு, மலையாளம், மராத்தி என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். போட்டியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் யார் அதிகம் சம்பளம் பெறுகின்றனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நடிகை ஸ்வேதா மேனன் தான் அதிக சம்பளம் பெருகிறாராம். ஒரு நாளுக்கு ஒரு லட்சம் ருபாய் அவரின் சம்பளம். இரண்டாவது இடத்தில் ரஞ்சனி ஹரிதாஸ் – அவர் ஒரு நாளுக்கு 80 ஆயிரம் ரூபாய் பெருகிறார்.
மற்ற போட்டியாளர்களின் சம்பள விவரம் (ஒரு நாளுக்கு):
அனூப் சந்திரன்: Rs 71 ஆயிரம்
Pearle Maaney: Rs 50 ஆயிரம்
அர்ச்சனா சுசீலன்: Rs 30 ஆயிரம்
ஹிமா ஷங்கர்: Rs 20 ஆயிரம்
மற்ற போட்டியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக தினமும் 10 ஆயிரம் ருபாய் வழங்கப்படுகிறது.