மகனை காக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த தாய்!

ரயிலில் டிக்கெட் பரிசோதகர்களிடம் இருந்து தன் மகனை காக்க ரயிலில் இருந்து தாய் குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஹாப்ரா ரயில் நிலையத்தில் லக்ஷ்மி ராணி மொண்டல்(65) என்பவர், அவரது மகன் அமல் கிருஷ்ணா மொண்டல் உடன் உறவினர் வீட்டுக்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்தனர்.

ரயில் வந்தவுடன் அவசரத்தில் பெண்கள் சிறப்பு பெட்டியில் இருவரும் ஏறியுள்ளனர். இந்நிலையில் ரயில் பரிசோதகர்கள் வந்தபோது, பயந்த லக்ஷ்மி தன் மகனை பாதுகாக்க ரயிலில் இருந்து குதித்துள்ளார்.

ஓடும் ரயிலில் இருந்து குதித்ததனால் அவருக்கு மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் ,சிறிது நேரம் காத்திருந்தால் அருகில் உள்ள அசோக் நகர் ரயில் நிலையத்தில் இறங்கியிருக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.