கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை தொடர்கொலை செய்தவரின் சொந்த காணியில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினமும் அந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் பணிகளின்போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் அந்த மனித எச்சங்கள் தொடர்பில் இன்னும் உரிய தகவல்கள் வெளியாகவில்லை. 58 வயதான மெக் ஆத்தர் என்ற பல தொடர் கொலைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான காணிப் பகுதிகளில் தோண்டல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போதே மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன. மெக் ஆத்தர் மீது தற்போதுவரை 8 கொலைக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.