நாம் அன்றாடம் சாப்பிடும் முட்டையில் சத்துக்கள் அதிகமாக உள்ளது, இருப்பினும் நாம் தூக்கி ஏறியும் முட்டை ஓட்டிலும் சத்துக்களும் நன்மைகளும் பலவுள்ளது.
முட்டை ஓட்டில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது, இது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சியடையவும் உதவுகிறது.
- முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து வீட்டில் தரையில் மற்ற இடங்களில் படிந்திருக்கும் கரைகளை எளிதாக அகற்றலாம்.
- முட்டை ஓட்டினை முகத்தில் தேய்க்கும் போது சருமமானது மென்மையாகிறது.
- முட்டை ஓடுகள் இரத்த அழுத்தத்தினை குறைக்கவும், கொழுப்பின் குறைக்கவும் உதவுகிறது.
- தினமும் நாம் அரை ஸ்பூன் முட்டை பவுடரை உட்கொண்டால் நம் அன்றாட தேவைக்கான கால்சியத்தில் 90 சதவீதம் தருகின்றது.
- முட்டை ஓட்டினை நன்கு அரைத்து நம் வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாம், இதன் மூலம் அவற்றிற்கு தேவையான கால்சியசத்தானது கிடைக்கும்.
- காபி கலக்கும் போது அதனுடன் சிறிது முட்டை ஓட்டின் பவுடரை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு தன்மையானது குறைந்து இனிப்பு சுவை அதிகரிக்கும்.
- தாவரங்களை முட்டை ஓட்டில் வளர்த்து நட்டால் அவை எளிதில் மட்கி அவற்றிற்கு உரமாகவும் மாறும் தன்மை கொண்டது.