இந்த பழத்தின் கொட்டையை இனி தூக்கி போட்டு விடாதீர்கள்!

முக்கனிகளில் முதல் கனியான, மாம்பழம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமாக உள்ளது.

மாம்பழத்தில் எந்தளவு சத்துக்கள் உள்ளதே அதன் கொட்டைகளிலும் அதே அளவு சத்துக்கள் உள்ளது.

இன்னும் சொல்லபோனால் மாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன.

1௦௦ கிராம் மாங்கொட்டையில் நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் 21 கிராம், ஆஷ் 2 கிராம், மக்னீசியம் 34 கிராம், பாஸ்பரஸ் 20 கிராம், பொட்டாசியம் 158 கிராம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

இத்தனை சத்துமிக்க, மாங்கொட்டையை முறையாக உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகளை காண்போம்.

இரத்த சோகை

இரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.

மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து பருப்பை எடுத்து சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு வறுத்து ஆறவைத்து, அரைத்து, பொடியாக்கி தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டால் இரத்த சேகை குணமாகும்.

வயிற்றுப்போக்கு

மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து ஆறவைத்து அரைத்து பொடியாக்கி, அத்துடன் ஓமப்பொடி, சுக்குப்பொடி, கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டு நெய் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

உடல் பருமன்

மாம்பருப்பை அரைத்து வத்தக்கொழம்பாக செய்து, சாப்பிடலாம். மாங்கொட்டை குழம்பு, கிராமங்களில் இன்றும் பிரபலம். மாம்பருப்பில் சுவையான துவையலும் செய்து சாப்பிடுவார்கள். இதன்மூலம், சமச்சீரான உணவு கிடைத்து, உடல் எடையைக் குறைக்கமுடியும்.

நீரிழிவு நோய்

சர்க்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக குழம்பாகவும் சேர்த்து வரலாம்.

உயர் இரத்த அழுத்தம்

மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்தஓட்டம் சீராகி, இதயம் துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் ஏற்படாது.

புரதச்சத்து

புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். பால் மற்றும் பீன்ஸ் வகை காய்கறிகளிலும் புரதச்சத்து நிறைய இருக்கிறது. அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில் புரதச்சத்து, அதிகமாக உள்ளது. மாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.