கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஒன்ராறியோ மாகாணத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய முதல்வருடனான சந்திப்பிற்கு பின்னர் செர்ரி கடற்கரையில் மேற்சட்டை இன்றி ஜாகிங் செய்ததாக கூறப்படுகின்றது.
வியாழக்கிழமை பிற்பகல் கனடாவில் இருவரும் குயின்ஸ் பார்க்கில் சந்தித்து அகதி கோரிக்கையாளர்களிற்கு ஆதரவு வழங்குவது குறித்து கலந்துரையாடினார்.
ஒன்ராறியோ மாகாண முதல்வருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுடன் பேசிய ட்ரூடோ முதல்வர் மிக ஏற்புத்திறனுடையவர் என பிரதமர் தெரிவித்தார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஆக்கப்பூர்வமானது என சந்திப்பிற்கு பின்னர் டுவிட்டர் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பின்னர் ட்ரூடோ செர்ரி கடற்கரையில் ஒரு தொப்பி மற்றும் கறுப்பு கட்டை காற்சட்டை மட்டும் அணிந்து ஜாகிங் செய்வதை சில ஊடகங்கள் படம் பிடித்துள்ளன.
ட்ரூடோ ஜாகிங் செல்வதை படம் எடுப்பது சாதாரணமானதல்ல அவர் வழக்கமாக சற்று கூடுதலான ஆடைகளுடன் ஜாகிங் செய்வது வழக்கம்.
நேற்று வெப்பம் அதிகமாக இருந்ததால் இவ்வாறு ஓடியதாக கூறப்படுகிறது.