“தொடரும் அவலம், பில்லிசூனியம் வைப்பதாக மிரட்டல் .,பெண்களை கடத்தி பாலியல் தொழிலுக்கு தள்ளிய நர்ஸ்.!”

பில்லி சூனியம் வைப்பதாக மிரட்டி பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நர்சுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லைபீரியாவில் பிறந்து இங்கிலாந்தில் நர்ஸ் வேலை பார்த்து அங்கு குடியுரிமை பெற்ற ஜோசப்பின் இயாமு என்பவர் நைஜீரியாவின் கிராமப்பகுதிகளில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்காக அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.

Nurse pushed women into prostitution by magic in naigeria க்கான பட முடிவு

மாந்திரீகத்திலும் பில்லி சூனியமத்தில் அதிக ஆர்வம்கொண்ட அவர் நைஜீரியாவை சேர்ந்த 5 இளம் பெண்களை தனது வலையில் வீழ்த்தி மாந்திரீக சடங்கில் ஈடுபட வைத்துள்ளார்.

அப்போது, பூஜைகள் செய்து கோழியின் இதயத்தை சாப்பிட வைப்பது, புழுக்களுடன் இரத்தத்தை குடிக்கச் செய்வது, பிளேடால் தங்கள் உடல்களில் அறுப்பது போன்ற சடங்குகளை செய்ய வைத்துள்ளார். அதன் பின், அவர்களை ஜெர்மன் நாட்டுக்கு பாலியல் தொழில் செய்ய அனுப்பியுள்ளார்.

Nurse pushed women into prostitution by magic in naigeria க்கான பட முடிவு

மேலும், அந்த தொழில் செய்யும் போது தப்பி ஓடிவிடக்கூடாது, தன்னை பற்றி போலீசாருடம் எதுவும் கூறக்கூடாது மாதம் தனக்கு 1,500 யூரோக்கள் அனுப்ப வேண்டும் என்றும் மறுத்தால் அந்தப் பெண்களின் குடும்பத்தினருக்கு பில்லி சூனியம் வைப்பதாக மிரட்டியும் வாக்குறுதி வாங்கியுள்ளார்.

தற்போது இந்த விவகாரங்கள் குறித்த தகவல்கள் வெளிவர போலீசாரிடம் நர்ஸ் ஜோசப்பின் இயாமு சிக்கியுள்ளார். மேலும் விசாரணையின் முடிவில் இயாமுவுக்கு 14 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.