அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற 72 வயது மகனை, 92 வயதுடைய தாய் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த அன்னா மே ப்லஸிங் என்ற 92 வயது மூதாட்டி, மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வயது முதிர்ச்சி காரணமாக, அவரை கவனிக்க முடியவில்லை எனக் கூறி தாயை முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிட முடிவு செய்த மகன், அதை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அன்னா மே ப்லஸிங், மகன் தூங்கிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அன்னா மே ப்லஸிங்கை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.