ஆரவ்வுடன் கைக்கோர்த்து சுற்றும் இந்த பிரபலம் யார் என்று தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிற்குளே ஓவியா ஆரவ்வை காதலிக்க தொடங்கினார். ஆனால் அதை ஏற்க ஆரவ் ஏற்க மறுத்ததால் ஓவியா மன உளைச்சலுக்கு ஆளாகி பின் போட்டியில் இருந்து வெளியேறினார்.

வெளியேறிய பின்னும் ஓவியா ஆரவ்வை தான் காதலிப்பேன் என்று உறுதியாக கூறினார். போட்டி முடிவடைந்தையடுத்து தற்போது ஆரவ் மற்றும் ஓவியா சேர்ந்து எடுத்துக்கொள்ளும் பல புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வந்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஆரவ் கையை ஓவியா பிடித்துக்கொண்டு நடப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இது தாய்லாந்தில் எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் காதலிக்க தொடங்கி இருக்கலாம் என கூறிவருகின்றனர்.