காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற நிலையில் காணாமல் போன 7 மீனவர்களை தேடும் நடவடிக்கைகளுக்கு இந்திய ஹெலிக்கொப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக மீன்பிடி திணைக்களத்தின் பணிப்பாளர் சுசன்ன கினிகே தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
ஹிக்கமுவை – தொட்டகமுவ சந்தியில் காலி வீதியை இடைமறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஹிக்கடுவை வெரல்லான பிரதேசத்தில் பிரதான வீதியை மறித்து இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.