உத்திரபிரதேச மாநிலத்தில் மகராஜ்கஞ்ச் பகுதியில் எவெரெஸெட் இங்க்லீஸ் என்ற தனியார் பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு மாணவிகளின் கழிவறையில் பாடசாலை முதல்வரின் தம்பி ரகசிய கெமரா ஒன்றை பொருத்தி மாணவிகளை வீடியோ எடுத்துள்ளான்.
இந்த வீடியோவை அவன் லேப்டாப்பில் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதை இரண்டு ஆசிரியர்கள் கண்டுள்ளனர். பின் மறைந்திருந்து வீடியோக்களை பார்த்த ஆசிரியர்கள் எந்த கழிப்பறை என்று கண்டறிந்து ரகசிய கெமராக்களை எடுத்துள்ளனர். பின் அதில் உள்ள மெமரி கார்டை எடுத்து அதில் இருந்த வீடியோக்களை செல்போனில் சேகரித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆசிரியர்களின் செயலை அறிந்த பாடசாலையின் முதல்வர் இருவரையும் அழைத்து கண்டித்து செல்போனில் இருந்த வீடியோக்களை அழிக்கச் செய்தார். மேலும் இருவரையும் பணிநீக்கம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் லேப்டாப்பில் பதிவேற்றி வைத்திருந்த வீடியோக்களை மீண்டும் சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
இரண்டாவது முறையாக பதிவேற்றப்பட்ட வீடியோவை பார்த்த மாணவிகளின் பெற்றோர்கள் பலர் பாடசாலை முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பாடசாலையின் பெண் முதல்வர், அவரது சகோதரர், வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய ஆசிரியர்கள் என நால்வரையும் கைது செய்தனர்.