வெளிநாட்டில் இருந்து வந்த மகள்: அரக்கனாக மாறிய தந்தை

டெல்லியில் தனது 18 வயது மகளின் உயிர்தோழியை அளவுக்கதிகமாக மதுகுடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குருகிராமை சேர்ந்த ராம் என்பவர் தொழிலதிபரின் 18 வயது மகள் திவ்யா வெளிநாட்டில் இருந்து வந்திருந்துள்ளார். திவ்யா தனது சிறுவயது தோழிகளை சந்தித்து அவர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார்.இதில் நெருங்கிய தோழியான சுமதி என்பவரை அழைத்துக்கொண்டு திவ்யாவும் அவரது அப்பாவும் பப்புக்கு சென்றுள்ளனர்.

வீட்டுக்கு வர தாமதாமாகிவிட்டதால், சுமதியை தனது வீட்டிலேயே தங்கவைத்துள்ளனர். சுமதி சிறுவயதில் இருந்தே திவ்யாவுடன் நெருங்கி பழகுவதால் அவரும் திவ்யா வீட்டிலே தங்கியுள்ளார்.

இந்நிலையில், சுமதி படுத்திருந்தபோது நள்ளிரவு நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ராம். வேண்டாம் என்று கதறியபோதும் அதனை ராம் கண்டுகொள்ளவில்லை. பின்னர், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

காலை விடிந்தவுடன் தனது வீட்டுக்கு சென்ற சுமதி, தனக்கு நேர்ந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளார், இதனைத்தொடர்ந்து காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர்.

இதற்கு முன் மது குடித்ததில்லை. கொஞ்சமாகக் குடிக்கலாம் என்று ராம் சொன்னார். சரியென்று குடித்தேன். ஆனால், அவர் என்னை அதிகமாகக் குடிக்க வைத்தார். அவர் இந்த நோக்கத்தோடுதான் என்னை குடிக்க வைத்துள்ளார் என்பது பிறகுதான் தெரிந்தது.

அதிகாலையின் என்னை அழைத்துச் சென்று கதவைப் பூட்டி, என்மீது சாய்ந்தார். என்னால் அவரி டமிருந்து தப்பிக்க முடியவில்லை. பிறகு இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ராமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.