சமையலில் நான் பயன்படுத்தும் மணம் மிக்க பொருளான சோம்பு உடல் எடையை குறைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது, இது பூண்டு வகையைச் சார்ந்தது. இலை, வேர் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை.
இனிப்பு வகை சோம்பில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களான அனிதோள், பென்கோன், மெதைல் சவிகோல் உள்ளன.
மேலும் ஃபிளவனாய்டுகள், கௌமெரின்கள், ஸ்டீரால்கள் காணப்படுகின்றன, கசப்பு வகைகளில் கூடுதலான ஃபென்கோன் உள்ளது.
சோம்பு தண்ணீர் தயாரிக்கும் முறை
1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.
பயன்கள்
- சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாபாலிசத்தை அதிகரித்து, கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரிக்க உதவுகின்றன.
- உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து தடுக்கிறது.
- ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.
- தினமும் இதை பருகி வந்தால் மூளை சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும், நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
- அளவுக்கு அதிகமாக பசி எடுக்க நபர்கள் சோம்பு தண்ணீரை குடித்தால் பசி அடங்கும்.
- பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலிக்குச் சோம்புத் தண்ணீர் நிவாரணம் தரும்.
- உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு கல்லீரல் தான், இது பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். கல்லீரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.