வீட்ல புறா கூடு கட்றது நல்லதா.. கெட்டதா?… அதிஷ்டம் யாரை குறி வைக்கும் தெரியுமா?

இது வெறும் புறாக்கூடு பற்றிய செய்தி மட்டுமல்ல. உங்களுடைய அதிர்ஷ்டம் பற்றிய விஷயமும் சேர்ந்தது தான். சிலர் புறாக்கூடு கட்டுவது அப சகுனம் என்பார்கள். சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் என்பது எங்கிருந்தோ வருவதெல்லாம் கிடையாது. இதுபோன்று நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களில் இருந்து உண்டாகும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் வாயிலாகவே உண்டாகிறது.

அதாவது நம்முடைய இயக்கம் மற்றும் முயுற்சி மட்டுமே அல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள சில காரணிகளும் நம்முடைய அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கின்றன எனறு தான் நம்முடைய பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள். அதிர்ஷ்டம் என்பது முயற்சியில்லாமல் வெற்றி பெறுவது கிடையாது.

புறாவின் கூடு

வீட்டில் புறாக்கூடு இருப்பது அதிர்ஷ்டம், அதிர்ஷ்டமில்லை என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், புறாக்கூட்டின் அளவு, எந்த திசையில் கூடு இருக்கிறது என்பது போன்ற எல்லா விஷயங்களையும் கணித்து தான் அதிர்ஷ்டம் என்பது உண்டா இல்லையா என கணிக்கப்படுகிறது.

புறாக்கூட்டில் எப்படி அதிர்ஷ்டம்

அதாவது உயரே கட்டப்பட்டிருக்கும் புறாக்கூட்டின் அளவு, அது வடக்கு, தெற்கு என அமைந்திருக்கும் திசை, அதனுடைய நிறம் அடர்ந்த பிரௌன் நிறத்தில் இருக்கிறதா இல்லை லைட் பிரௌனா ஆகியவற்றை நீங்கள் உற்று நோக்கினால் போதும்.

உங்களுக்கு எதையும் ஆராய்ந்து முடிவு எடுக்கும் திறனும் அதேபோல் அந்த கூட்டில் எத்தனை புறாக்கள் இருக்கின்றன என்பதையும் கவனித்து வந்தால் உற்று நோக்கல் திறன், பறவைகள் மீதான கருணை, ஆகியவற்றை உணர்வதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றல்களைப் பெற முடியும். அதுவே உங்களுக்கு அதிர்ஷ்டம் தானே.

துரதிஷ்டம்

ஆனால் ஆன்மிக ரீதியாக புறாவை வீட்டில் வளர்த்தால் துரதிஷ்டம் உண்டாகும். அந்த வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய்ப்படுவார்கள் என்றெலவ்லாம் சொல்வதுண்டு. அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

புதிதான ஏதேனும் வீட்டுக்கு வாடகைக்கோ அல்லது சொந்த வீடாக இருந்தாலும் நீங்கள் செல்வதற்கு முன்பாக அங்கே ஏதேனும் புறாக்கூடோ அல்லது குருவிக்கூடோ இருந்தால், அது அந்த வீட்டுக்கு அதிர்ஷ்டம் தரும் ஜீவ சக்தியாக இருக்கும். பொதுவாக மனிதர்களைவிட பறவைகளிடம் ஜீவ சக்தி மிக அதிகம்.

வீட்டுக்கு வாயிலுக்கு அருகில், நெல்மணிகள் அல்லது அரிசியை கட்டித் தொங்க விடுவது நல்லது. அது வீட்டைத் தேடி வரும் பறவைகளுக்கு உணவாக அமையும். அப்படியே பழக்கப்படுத்தி விட்டால் அந்த பகுதிகளிலேயே கூடு கட்டி, குஞ்சு பொரிக்க ஆரம்பித்துவிடும்.