பிக்பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட லீக்ஸ் புகழ் ஸ்ரீ ரெட்டி!

தெலுங்கில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் சாம்ராட் ரெட்டிக்கும், தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார். நானி மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது பிக் பாஸ் 2 தெலுங்கு போட்டியாளரான நடிகர் சாம்ராட் ரெட்டி பற்றி புது விஷயத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, சாம்ராட் ரெட்டிக்கும் தனக்கும் திருமணமாகிவிட்டதாக ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதுமட்டுமல்லாது, ஸ்ரீ ரெட்டி வெட்ஸ் சாம்ராட் ரெட்டி என்று கூறி அவர் தன்னுடன் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்த சில விஷயங்களை வெளியிட்டுள்ளார்.

சாம்ராட் ரெட்டி ஸ்ரீ ரெட்டியுடன் வாட்ஸ்ஆப்பில் கடலை போட்டுள்ளார், மேலும் அவரை தன்னுடன் டேட்டிங் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சாம்ராட்டின் பேச்சுக்கு தான் மயங்கவில்லை என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

மேலும், பிரிந்து வாழும் மனைவி ஹர்ஷிதாவின் வீட்டிற்குள் புகுந்து திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர் சாம்ராட் ரெட்டி. சாம்ராட்டுக்கும், ஹர்ஷிதாவுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தமிழ் பட இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ள ஸ்ரீ ரெட்டி சாம்ராட் ரெட்டி பற்றியும் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். இது எல்லாம் பப்ளிசிட்டி என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஆனாலும், என்னது..! ஸ்ரீ ரெட்டிக்கும், சாம்ராட்டுக்கும் திருமணமாகிவிட்டதா..? என்றும் பலர் வியக்கிறார்கள்.