இளம்பெண்கள் இருவர் வீட்டை பூட்டிக் கொண்டு கவர்ச்சி நடனமாடியதைக் கண்ட அவர்களது தாய் காலணிகளை கழற்றி அடித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில், இளம் வயதில் இருக்கும் சகோதரிகள் இருவரும் தங்களின் அறைக்குள்ளே பாடல் ஒன்றைப்போட்டு ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அந்த நடனத்தை அவர்கள் காணொளியாக பதிவு செய்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று அறையின் உள்ளே நுழைந்த பெண்களின் தாய் இவர்களின் நடனத்தை பார்த்து, ஆத்திரமடைந்து காலில் இருந்த காலணியை கழற்றி ஆவேசமாக இரண்டு மகள்களையும் அடித்துள்ளார்.
தாய் கொடுத்த அடியை தாங்க முடியாமல் அவர்கள் அறையை விட்டு கதறிக் கொண்டு ஓட விடாமல் துரத்தி அடித்துள்ளார் அவர்களின் தாய்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
மேலும் இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த அந்த பெண்கள், வீடியோவை பார்க்கும் போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது என்று கூறி பதிவேற்றம் செய்துள்ளனர்.