கைக்கோர்த்தப்படி சுற்றித்திரியும் ஓவியா ஆரவ்… புகைப்படங்கள்!

சென்னை: நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பேங்காக் வீதிகளில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக உலா வருகிறது.

நடிகை ஓவியாவும், நடிகர் ஆரவ்வும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர்கள்.

அப்போது ஆரவ்வை தீவிரமாக காதலித்தார் நடிகை ஓவியா. ஆனால் அவர் காதலை ஏற்க மறுத்ததால், தீவிர மனஉளைச்சலுக்கு ஆளான ஓவியா, பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

oviya-aarav-dating-pics-goes-viral-1-1530941133-560x420  கைக்கோர்த்தப்படி பேங்காக் தெருக்களில் சுற்றித்திரியும் ஓவியா ஆரவ்... வைரலான புகைப்படங்கள்! oviya aarav dating pics goes viral 1 1530941133

அந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இருவரும் நல்ல நண்பர்களா தொடர்வது என முடிவு செய்து அறிவித்தனர்.

தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஓவியாவும் ஆரவ்வும் தாய்லாந்தின் பேங்காக் நகரில் கைக்கோர்த்தப்படி சுற்றித்திரியும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

oviya-aarav-dating-pics-goes-viral-22-1530941142  கைக்கோர்த்தப்படி பேங்காக் தெருக்களில் சுற்றித்திரியும் ஓவியா ஆரவ்... வைரலான புகைப்படங்கள்! oviya aarav dating pics goes viral 22 1530941142

நெட்டிசன்கள் அதை சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொண்டாரா என சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகிறது.

அவர்கள் இருவரும் லிவிங்டுகெதர் பாணியில் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளனர். சந்தோஷமான செய்தியை எதிர்பார்த்து அவர்களது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.