வடசென்னை கடல் கிராமிய வாவல் குழம்பு

தேவையான பொருட்கள்

மீனை ஊறவைக்க
வாவல் மீன் 500 கிராம்
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
எலுமிச்சம்பழ சாறு 1 மேஜைக்கரண்டி

குழம்பு செய்ய

மரசெக்கு கடலெண்ணய் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் 2
கறிவேப்பில்ல ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் 14 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 3 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 2 ( அம்மிகல்லில் நசுக்கியது)
பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
காஸ்மீரி மிளகாய் தூள் 3 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தூள் 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி
புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
உப்புத்தூள் தேவையான அளவு
கறிவேப்பில்ல 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி ( பொடியாக நறுக்கியது)

செய்முறை

1. இப்பொழுது ஒரு அகன்ற கெனமான பாத்திரத்தில் நன்றாக கழுவிய வாவல் மீனை ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிசிறி குறைந்தபட்சமாக இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2. புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்தது அதன் பிறகு நன்றாக பிழிந்து புளி கரைசலை தயார் செய்து கொள்ள வேண்டும்.

3. இப்பொழுது ஒரு அகன்ற கெனமான பாத்திரத்துல மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் ,அதில் கடுகு சேர்த்துகோங்க நன்றாக வெடிக்க ஆரம்பித்த உடன் அதில் வெந்தயம் சேர்த்து நன்றாக பொரிந்ததும், வரமிளகாய் மற்றும் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

5. அதில் அம்மிகல்லில் நசுக்கிய விழுதாக மையாக பச்சை மிளகாய் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் அனைத்து பொடி வகைகளையும் சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

7. இப்பொழுது அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்துகோங்க நிறைய தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

8. இச்சமயத்துல நன்றாக ஊறவைத்துள்ள வாவல் மீனை சேர்த்துகோங்க நன்றாக 15 நிமிடங்கள் சிறுதீயிலேயே கொதிக்க விட்டுகோங்க இறக்க வேண்டும்.

9. இறக்கிய உடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவவும்.