தமிழர்களிற்காக பதறும் மஹிந்த!

விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த விடயத்திற்கு பின்னணியில் சொல்லப்படாத ஒரு உண்மை இருப்பதாகவும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முதியங்கன ரஜமகாவிகாரைக்கு நேற்று விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என கூறிய விடயம் பிழையானது எனவும் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் “விஜயகலாவின் கூற்றில் சொல்லப்படாத உண்மைகள் இருக்கின்றன. இந்த அரசாங்கம் தழிழ் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவிட்டது என்பதே அவையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் இயலாமையினாலேயே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.