அரபு தேசத்தில் விளையும் பயிரை தமது வீட்டில் உண்டாக்கி பலன் பெறும் தமிழ்க் குடும்பம்!!

அரபு தேசங்களில் அதிகமாக பயிரிடப்படும் பேரீச்சம்  மரத்தை யாழ்ப்பாணத்திலுள்ள தமது வீட்டில் உண்டாக்கி அதன் பலனை மகிழ்ச்சியாக  சாவகச்சேரியைச் சேர்ந்த தமிழ்க் குடும்பமொன்று அனுபவிக்க தொடங்கியிருக்கின்றது.

பாலைவனப் பகுதியில் விளைய கூடிய பேரீச்சை மரத்தை பணம் வரும் மரமாக மாற்றி சாவகச்சேரி பகுதியை சேர்ந்த குடும்பமொன்று வெற்றியடைந்திருக்கின்றது.

அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை மரம் 30 வருடங்களாக சாவகச்சேரி பகுதியின் வீடு ஒன்றில் பராமரித்து வந்த குடும்பத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக அதன் பலாபலன்களை தொடர்ச்சியாக பெறுகின்றனர்.

அத்துடன் இந்த மரங்கள் பூத்து காய்த்து நல்ல பழங்கள் கிடைப்பதாக வீட்டின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.