ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை நிறுத்த போவதாக இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதனால் இவ்விரு நாடுகளுக்கிடையேயான விரிசல் அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்கா ஈரான் நாட்டிற்கு பொருளாதார தடையும் விதித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை இந்தியா குறைத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று கொண்டு இந்தியாவும் பெட்ரோல் டீசல் பொருட்களை ஈரானிடம் வாங்குவதை நிறுத்துவதாக முடிவு செய்திருக்கிறது. இதுபற்றி தற்போது அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் தகவல் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
இதனால் கோபமான ஈரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எங்களிடம் இருந்து பெட்ரோல் வாங்கவில்லை என்றால் பொருளாதார சலுகைகளை நாங்கள் திரும்ப பெற்று கொள்கிறோம் என்றும் மேலும் பெட்ரோல் பொருட்களை வாங்கி வர ஈரானில் இருக்கும் துறைமுகத்தையும் கடல்மார்க்கத்தையும் பயன்படுத்த விடமாட்டோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் அண்டை நாடான பாகிஸ்தானிற்கு மிக குறைந்த விலையில் டீஸல் மற்றும் பெட்ரோலை தர போவதாகவும் அறிவித்திருக்கிறது ஈரான். இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் விரிசல் வரலாம் என தெரிய வருகிறது.