மஹத் மங்காத்தா படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து ஜில்லா, சென்னை-28 செகண்ட் இன்னிங்ஸ் ஆகிய படங்களில் தலையை காட்டினார்.
அதுமட்டுமின்றி தெலுங்கில் சில நாட்கள் பிஸியாகவும் இருந்தார், அப்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் மனோஜ் மஞ்சுவிடம் இவர் ஒரு நாள் தர்ம அடி வாங்கியுள்ளார்.
ஆம், இதை அவரே போலிஸிடம் புகாராக தெரிவித்தும் உள்ளார், சென்னையில் நடந்த ப்லிம் பேர் விருது விழா பார்ட்டி ஒன்றில் இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
அப்போது மனோஜ் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, மஹத்தை அடித்து வெளுத்துள்ளார், என்ன காரணம் என்று தெரியவில்லை.
மேலும், உன் மரணம் என் கையில் என்பது போலவும் மஹத்திடம் மனோஜ் கூறியுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மஹத் குறித்து பல தகவல்கள் வெளிவர, இதுவும் ஒரு செய்தியாக உலா வருகின்றது.