மணமகனை நிராகரித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வீடியோ

புதுடெல்லியில் திருமணத்தை நிராகரித்த மணப்பெண்ணை நபரொருவர் தாறுமாறாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியில், இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர், சில காரணங்களால் திருமணத்தை நிராகரித்ததாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் (மணமகன்) அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அப்பெண் அவரை மதிக்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர் அப்பெண்ணை அருகிலிருந்த கடைக்குள் இழுத்துச் சென்று தாறுமாறாக தாக்கியுள்ளார்.

அப்பெண், காப்பாற்றுமாறு கடைகாரரிடம் கெஞ்சிய போது, கடைக்காரர் கண்டுகொள்ளாது அமைதியாக இருக்கிறார்.

இந்த காட்சியானது, அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியிருந்தது.

தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.