சர்க்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்

விஜய் நடித்து வரும் சர்க்கார் படமாக்கப்பட்டு வருகிறது. முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

விஜய்யின் பிறந்த நாளையொட்டி வெளியான சர்க்கார் பட போஸ்டர் இணையதளத்தில் மிகவும் ட்ரண்டானது. மேலும் விஜய் புகைப்பிடிப்பது போல இருந்தது சர்ச்சையானது.

ஒருவர் எதிர்க்க பல அரசியல் வாதிகளும் தங்கள் பங்குக்கு எதிர்கருத்து தெரிவித்தார்கள். ஆனால் இயக்குனரும், விஜய்யும் மிகவும் அமைதிகாத்தனர். இது விஜய் மீது இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது வாதமாகிவிட்டது.

ஆனால் தமிழக அரசின் நோட்டீஸால் பின் போஸ்டர் நீக்கப்பட்டது. ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சி தான். ஆனாலும் அவர்கள் எல்லாம் அதே போஸ்டர் DP ஆக செட் பண்ணியிருந்தார்கள்.

இவ்வளவுக்கு அமைதிக்கு காரணம் இது வெறும் ட்ரையல் தானாம். ஆனால் படத்தில் பல முக்கிய விசயங்கள் பேசப்பட்டுள்ளதாம். மேலும் இதை ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடுவார்களாம்.

இவற்றை பற்றி சொன்னால் மேலும் சர்ச்சையாக வாய்ப்புள்ளதாம். இதனால் படக்குழு எதிர்வாதம் செய்யாமல் மேலும் அமைதிகாத்து வருகிறதாம்.