p>தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் நானிக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீரெட்டி சர்க்கார் பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முருகதாஸ் ஜி எப்படி இருக்கீங்க என்றும் கிரீன்பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா ? என்றும் கேள்வி எழுப்பி உள்ள ஸ்ரீரெட்டி வெளிகொண்டா சீனிவாஸ் மூலம் நாம அறிமுகமானோம்…. ஒரு வாய்ப்பு வழங்குவதாக சொன்னீங்க…. நாம் நிறைய முறை… இருந்தாலும் வாய்ப்பு வழங்கவில்லை என்று பதிவிட்டுள்ள அவர் இறுதியில் ஏ.ஆர் முருகதாசை சிறந்தமனிதர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் சர்க்கார் படத்திற்காண இறுதிகட்ட பணிகளில் உள்ள இயக்குனர் ஏ.ஆர் முருகாதாஸ் இந்த டுவீட் குறித்து இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.