2019 ஆம் ஆண்டு நிலவில் தரை இறங்கவுள்ள ஆளில்லா விண்கலம்!

இஸ்ரேலிய அரசு சாரா நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு இறுதியில் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

எலான் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபால்கன் 9 ஏவுகணை மூலம் டிசம்பர் 9 ஆம் திகதி ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து இந்த விண்கலத்தை செலுத்த இருப்பதாக ஸ்பேஸ்ஐஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விண்கலம் 2019 பிப்ரவரி மாதம் நிலவில் தரை இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.