யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ஷ!!

ஒரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். முன்னதாகஇன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடொன்றிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்வது இது முதல் முறையென்பது குறிப்பிடத்தக்கது.