விஜயகலா எம்.பியால் சிக்கலில் சிக்கிய முக்கிய அமைச்சர்

விடுதலைப் புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி தெரிவித்த விடயம் குறித்து அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினால் நேற்றைய தினம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.

இந்த கருத்தானது தெற்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த நிலையிலேயே அமைச்சர் வஜித அபேவர்தன, தனது அலுவலகத்தில் வைத்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரையில் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று அமைச்சர் திலக் மாரப்பனவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விஜயகலாவின் சர்சைக்குரிய கருத்தால் குறித்த அமைச்சர்கள் சிக்கலில் சிக்கியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.