பெரும்பாலும் இன்றைய சந்ததியினருக்கு முடி கொட்டுவது என்பது தீராத பிரச்சினையாகவே உள்ளது. அதில் ஆண்களுக்கு வழுக்கை எற்படுதல் பெரும் பிரச்சனையாகவே உருவெடுத்து உள்ளது.
இதனை போக்க கண்ட கண்ட மருந்துகளையும் அதிக விலையுர்ந்த கெமிக்கல் கலந்த எண்ணெய்களையும் தலைக்கும் வைத்து தற்காலிகாமாக வழுக்கைத் தலையில் முடியை வளர செய்வதுண்டு.
இதனை தவிர்த்து இதற்கு சில வீட்டு வைத்தியங்களும் உண்டு. இதனை செய்வது மூலம் வழுக்கை தலையிலும் முடியினை வளர செய்ய முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
- வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.
- 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீ ஸ்பூன் பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.
- ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக பிரித்து வைத்து அடித்துக் கொள்ளுங்கள். உடனே 1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேருங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை கொண்டு அலசி விடுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
- காய வைத்த கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள். நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி தலையில் தடவிக் கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு மாதத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.
- பேக்கிங் சோடா மற்றும் ஹென்னா பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப்பை தலையில் தேய்த்து பயன்படுத்தி வரவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசி விடவும். சீக்கிரமாகவே நல்ல மாற்றத்தை காணலாம்.